மத்திய வரிகளில் பங்குத் தொகையான ரூ. 92 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு விடுவிப்பு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்

மத்திய வரிகளில் ஏப்ரல், மே மாதங்களுக்கான பங்குத் தொகையாக ரூ. 92,077 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
மத்திய வரிகளில் பங்குத் தொகையான ரூ. 92 ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு விடுவிப்பு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்

மத்திய வரிகளில் ஏப்ரல், மே மாதங்களுக்கான பங்குத் தொகையாக ரூ. 92,077 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தனது சுட்டுரை பக்கத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

மத்திய வரிகளில் ஏப்ரல், மே மாதங்களுக்கான பங்குத்தொகையாக ரூ. 92,077 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. இதில் ஏப்ரல் மாத பங்குத் தொகை ரூ. 46,038 கோடியே 10 லட்சமாகும். மே மாத பங்குத் தொகை ரூ. 46,038 கோடியே 70 லட்சமாகும். இந்த இக்கட்டான கால கட்டத்தில், மாநிலத்தின் தடையற்ற செலவினங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மத்திய அரசின் நிதி இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மொத்த வரி வருவாயில் கணக்கு வைக்கப்படாமல், 2020-21 நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்ட வரவுத் திட்டங்களின் அடிப்படையிலேயே இந்தப் பங்குத் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று சுட்டுரைப் பதிவில் நிதியமைச்சா் பதிவிட்டுள்ளாா்.

மத்திய வரிகளில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மாநிலங்களின் பங்கு ரூ. 7.84 லட்சம் கோடி என்ற அளவில் மத்திய நிதிநிலை அறிக்கையில் உத்தேசிக்கப்பட்டிருந்தது.

மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்காக 41 சதவீதத்தை ஒதுக்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்திருந்தது. முன்னதாக 14-ஆவது நிதிக்குழு, மாநிலங்களுக்கு 42 சதவீத பங்குத்தொகையை வழங்க பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com