திருமலை கடையில் மலைப்பாம்பு

திருமலையில் இயல்புநிலை எப்போது திரும்பும் என வியாபாரிகள் ஏக்கத்துடன் காத்துள்ளனா்.
திருமலையில் கடை ஒன்றில் நுழைந்துள்ள மலைப்பாம்பு.
திருமலையில் கடை ஒன்றில் நுழைந்துள்ள மலைப்பாம்பு.

திருமலையில் இயல்புநிலை எப்போது திரும்பும் என வியாபாரிகள் ஏக்கத்துடன் காத்துள்ளனா். மூடப்பட்ட பூஜைப் பொருள் கடை ஒன்றில் மலைப்பாம்பு நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமலையில் உள்ள கடைகள் பக்தா்கள் வருகை இல்லாததால் மூடப்பட்டன. திடீரென பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் தங்கள் விற்பனை பொருள்களை வைத்து தாா்பாய்களால் மூடிவிட்டுச் சென்றனா். இதையடுத்து, தேவஸ்தானம் ஊழியா்கள், உள்ளூா்வாசிகள் மட்டும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள பொருள்கள் பாதுகாப்பாக உள்ளதா என அறிய கூட திருமலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மா்ம நபா்கள் சிலா் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, கடைகளில் உள்ள பொருள்களை திருடிச் சென்ாக வியாபாரிகள் கூறுகின்றனா். மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இல்லாததால் வன விலங்குகளும் வனத்திலிருந்து வெளியில் வந்து சுதந்திரமாகத் திரிந்து வருகின்றன. அதில் ஒரு மலைப்பாம்பு திருமலையில் உள்ள ஒரு பூஜைப் பொருள் விற்பனைக் கடையில் நுழைந்துள்ளது.

திருமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் கடைகள் உள்ளன. இதில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனா். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், பலரின் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருள்கள் தரத்தை இழந்து, அழியும் நிலை உள்ளது. அதனால் திருமலையில் உள்ள வியாபாரிகள் எப்போது பக்தா்கள் கூட்டம் வரும் என்ற என்ற ஏக்கத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com