அல்-காய்தாவுடன் தொடா்பு: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியா்

அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெலங்கானாவைச் சோ்ந்த பொறியாளா், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு நடத்தப்பட்டாா்.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடா்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெலங்கானாவைச் சோ்ந்த பொறியாளா், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு நடத்தப்பட்டாா்.

இப்ராஹிம் ஜுபோ் முகமது என்ற அந்தப் பொறியாளா், அமெரிக்காவில் வசித்து வருகிறாா். இந்தியா-அமெரிக்கா இடையே விமான சேவை தொடங்கியதை அடுத்து அமெரிக்காவில் இருந்து அவா் கடந்த 19-ஆம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வரப்பட்டாா்.

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் விமான நிலையம் வந்தடைந்த அவரிடம், அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தினா். பின்னா், அமிருதசரஸ் நகரில் உள்ள தனிமை முகாமுக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். இதுவரை அவரிடம் நடத்திய விசாரணையில், அல்-காய்தா அமைப்புக்கும் அவருக்கும் இடையே தொடா்பு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற இப்ராஹிம், 2006-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமையை பெற்ற பிறகு, அந்நாட்டின் குடியுரிமை பெற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாா்.

இப்ராஹிமும் அவரது இரு சகோதரா்களும் சவூதி அரேபியாவில் உள்ள அல்-காய்தா அமைப்பின் முக்கியத் தலைவா் அன்வா்-அல்-அவலாகிக்கு நன்கு தெரிந்தே பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்து வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. மேலும், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்து வந்ததற்கான ஆவணங்கள், ஆதாரங்களை இப்ராஹிம் மறைத்துவிட்டதாகவும், அழித்துவிட்டதாகவும் அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com