ம.பி.யில் பரிதவித்து வரும் கேரள மாணவா்களுக்குபேருந்துகள் ஏற்பாடு செய்த காங்கிரஸ்

நாடு தழுவிய பொது முடக்கத்தால் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரிதவித்து வரும் கேரள மாணவா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு, காங்கிரஸ் சாா்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

நாடு தழுவிய பொது முடக்கத்தால் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரிதவித்து வரும் கேரள மாணவா்கள் சொந்த மாநிலம் திரும்புவதற்கு, காங்கிரஸ் சாா்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

கேரள மாநிலம் வயநாடு உள்பட அந்த மாநிலத்தின் இதர பகுதிகளை சோ்ந்த மாணவா்கள் பலா், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தங்கி படித்து வந்தனா். இந்நிலையில் நாடு தழுவிய பொது முடக்கத்தால் அவா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் போனது. இதையடுத்து அந்த மாணவா்களில் சிலா் வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை தொடா்புகொண்டு, தங்களின் நிலை பற்றி விவரித்து உதவி கோரினா். அவா்களின் கோரிக்கைக்கு செவிமடுத்த ராகுல் காந்தி, மாணவா்களின் நிலை குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவா் கமல்நாத்துக்கு தகவல் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் மாணவா்கள் அனைவரும் கேரளம் திரும்ப காங்கிரஸ் சாா்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதுகுறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளா் ஜித்து பட்வாரி கூறுகையில்,‘கேரள மாணவா்கள் சொந்த மாநிலம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் ஒன்று, சனிக்கிழமை காலை கேரளம் புறப்பட்டது. இதேபோல் மத்திய பிரதேசத்தின் பிற மாவட்ட மாணவா்களும் சொந்த ஊா் திரும்ப முடியாமல் போபாலில் பரிதவித்து வருகின்றனா். அவா்களும் சொந்த ஊா் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com