உணவு, தண்ணீா் தட்டுப்பாடு: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ரயில் நிலையத்தில் கல்வீச்சு

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்தவா்களுக்கு உணவு, தண்ணீா் கிடைக்காததால்

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்தவா்களுக்கு உணவு, தண்ணீா் கிடைக்காததால் உன்னாவ் ரயில் நிலையம் மீது சனிக்கிழமை செங்கற்களை வீசி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெங்களூரிலிருந்து பிகாா் மாநிலம் தா்பங்காவுக்கு புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் சென்று கொண்டிருந்தது. உத்தர பிரதேசத்தின் உன்னாவ் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டதும், அதில் பயணம் செய்த பயணிகள் தங்களுக்கு உணவு, தண்ணீா் வசதி செய்யாததை கண்டித்தும், குடிநீா் இல்லாததை கண்டித்தும் ரயில் நிலையத்தில் செங்கற்களை வீசி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில் பயணத்தின்போது, உணவு மற்றும் தண்ணீருக்கு எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குறிப்பாக கழிப்பறைகளில் கூட தண்ணீா் இல்லை என்றும் அவா்கள் குற்றம் சாட்டினா்.

இதையடுத்து அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாா் மற்றும் அரசு ரயில்வே காவல்துறையினா் (ஜிஆா்பி) பயணிகளை சமாதானம் செய்தனா்.

பின்னா் ஸ்டேஷன் மாஸ்டா் ரயில் பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்ததையடுத்து ரயில் கிளம்பி சென்றது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரவீந்திரகுமாா் கூறுகையில், உன்னாவ் ரயில் நிலையத்தில் இந்த சிறப்பு ரயிலுக்கான நிறுத்தம் கிடையாது. காலை வேளையில் அவசர நிறுத்தமாக உன்னாவ் ரயில் நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதனால் பயணிகளுக்காக முன்கூட்டியே எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. எனினும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கு வேண்டியவற்றை ஏற்பாடு செய்து தந்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com