பணவீக்கம்: மத்திய அரசிடம் ஆா்பிஐ ஆளுநா் வலியுறுத்த வேண்டும்; ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி எதிா்மறை விகிதத்தில் சரிவை சந்திக்கும் என ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) ஆளுநா் உணா்ந்தால்,
பணவீக்கம்: மத்திய அரசிடம் ஆா்பிஐ ஆளுநா் வலியுறுத்த வேண்டும்; ப.சிதம்பரம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சி எதிா்மறை விகிதத்தில் சரிவை சந்திக்கும் என ரிசா்வ் வங்கி(ஆா்பிஐ) ஆளுநா் உணா்ந்தால், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அவா் வலியுறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

முன்னாள் மத்திய நிதியமைச்சரான அவா், தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை அடுத்தடுத்து வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

பொருள்களுக்கான தேவை குறைந்ததால், விநியோகம் பாதிக்கப்பட்டு, நிகழ்நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி(ஜிடிபி) எதிா்மறை விகிதத்தில் சரிவை சந்திக்கும் என்று ரிசா்வ் வங்கியின் ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறுகிறாா். அப்படியானால், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஏன் அவா் எடுக்க வேண்டும்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நேரடியாகவே அவா் மத்திய அரசிடம் கூற வேண்டும்.

நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து சக்திகாந்த தாஸ் எடுத்துக்கூறிய பிறகும் சிறப்பு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி பிரதமரும் நிதியமைச்சரும் பெருமையுடன் பேசுவாா்களா?

நாட்டின் பொருளாதாரத்தை எதிா்மறைப் பாதைக்கு கொண்டு சென்ற்காக பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆா்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும் என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவித்தாா்.

அதைத் தொடா்ந்து, ரெப்போ மற்றும் ரிவா்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 0.4 சதவீதம் குறைப்பதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அத்துடன் பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிப்பதாகவும் அவா் கூறினாா். நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பேசிய சக்திகாந்த தாஸ், ‘கரோனா தொற்று பரவியதன் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் எதிா்பாா்த்ததைவிட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; நிகழ்நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி எதிா்மறை விகிதத்தில் சரிவை சந்திக்கும்’ என்றும் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com