உ.பி.யின் பாந்தா கிராமத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி தற்கொலை

சமீபத்தில் மும்பையிலிருந்து திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
உ.பி.யின் பாந்தா கிராமத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளி தற்கொலை

சமீபத்தில் மும்பையிலிருந்து திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி வீட்டு தனிமைப்படுத்துதலில் இருந்தபோது தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு காமசின் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட முசிவன் கிராமத்தைச் சேர்ந்த சுனில் (19) என்ற இளைஞர் ஷரார்மிக் ரயிலில் வந்திருந்தார். இவர் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டார். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சடலத்தைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக காமாசின் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஓம்கர் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

இளைஞர் சுனில் மும்பையில் ஒரு எஃகு தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவும், தொழிற்சாலை மூடப்பட்டதன் காரணமாக அவர் சொந்த ஊருக்குத் திரும்பியதாகவும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், அவரது தந்தை குஜராத்தில் சிக்கித் தவிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com