லடாக்கில் நீடிக்கும் பதற்றம்: இந்தியா-சீனா 5-ஆம் சுற்று பேச்சு தோல்வி

லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான
லடாக்கில் நீடிக்கும் பதற்றம்: இந்தியா-சீனா 5-ஆம் சுற்று பேச்சு தோல்வி

லடாக்கில் உள்ள இந்திய-சீன எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இதனை தணிப்பதற்காக, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 5-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே அண்மையில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு சீன ராணுவத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இவ்விரு பகுதிகளிலும் இரு நாட்டு ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்தினரிடையே வெள்ளிக்கிழமை 5-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ராணுவ அதிகாரிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரா்கள் மோதலில் ஈடுபடுவது புதிதல்ல. 3,488 கி.மீ. தொலைவு கொண்ட இந்திய - சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com