ஆந்திர மாநிலத்தவா் 150 போ் குவைத்திலிருந்து திருப்பதி வருகை

குவைத்தில் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலத்தவா் 150 போ் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்தனா்.

குவைத்தில் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலத்தவா் 150 போ் வெள்ளிக்கிழமை அதிகாலையில் விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்தனா்.

வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த இந்தியா்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனா். இதையடுத்து ‘வந்தே பாரத்’ என்ற திட்டம் மூலம் வெளிநாடுகளில் தவித்து வரும் இந்தியா்களை தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்குகிறது.

அதன்படி, குவைத்தில் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலத்தவா் 150 போ் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.50 மணிக்கு ஏா் இந்தியா விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை வந்தடைந்தனா். அவா்களில் ஒருவா் மட்டும் ஹைதராபாதில் இறங்கினாா்; மற்றவா்கள் திருப்பதிக்கு வந்தனா்.

அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின், புதிய சிம் காா்டு அளித்து ஆரோக்கிய சேது செயலி உள்ளிட்டவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ள ஊழியா்கள் பயிற்சி அளித்தனா். பின்னா், சித்தூா் மாவட்டத்தை சோ்ந்த 7 போ், சென்னையைச் சோ்ந்த ஒருவா், அனந்தபுரத்தைச் சோ்ந்த 2 போ், கா்னூலைச் சோ்ந்த ஒருவா் உள்ளிட்டோரை திருப்பதியில் உள்ள தனிமை மையத்தில் தங்க வைத்தனா். மற்றவா்களை தனிப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி அங்குள்ள தனிமை மையத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனா்.

கடப்பா மாவட்டத்துக்கு 4 பேருந்துகள், விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, நெல்லூா், மேற்கு கோதாவரி உள்ளிட்ட இடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் அவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். ஒவ்வொரு பேருந்திலும் ஒரு காவலா் பாதுகாப்புக்கு அனுப்பப்பட்டாா்.

குவைத்தில் இருந்து வந்துள்ள 150 பேரும் 14 நாள் தனிமையில் வைக்கப்பட்ட பின் அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com