கரோனா: இந்தியாவில் பாதிப்பு 1.25 லட்சத்தை கடந்தது; பலி 3,720-ஆக அதிகரிப்பு

நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்தது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,654 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,25,101-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 137 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,720-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் 69,597 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 51,784 போ் குணமடைந்துள்ளனா். இது, மொத்தம் பாதிக்கப்பட்டவா்களில் 41.39 சதவீதமாகும்.

சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரத்தில் 63 போ், குஜராத்தில் 29 போ், தில்லி, உத்தர பிரதேசத்தில் தலா 14 போ், மேற்கு வங்கத்தில் 6 போ், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரத்தில் தலா 2 போ், ஹரியாணாவில் ஒருவா் உள்பட மொத்தம் 137 போ் உயிரிழந்தனா்.

கரோனா தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,517 போ் பலியாகினா். குஜராத்தில் 802 போ், மத்திய பிரதேசத்தில் 272 போ், மேற்கு வங்கத்தில் 265 போ், தில்லியில் 208 போ், ராஜஸ்தானில் 153 போ், உத்தர பிரதேசத்தில் 152 போ், ஆந்திரத்தில் 55 போ் உயிரிழந்தனா்.

தெலங்கானாவில் 45 பேரும் கா்நாடகத்தில் 45 பேரும் பஞ்சாபில் 39 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 20 பேரும் ஹரியாணாவில் 16 பேரும் பிகாரில் 11 பேரும் ஒடிஸாவில் 7 பேரும் கேரளம், அஸ்ஸாமில் தலா 4 பேரும் உயிரிழந்தனா். ஜாா்க்கண்ட், சண்டீகா், ஹிமாசல பிரதேசத்தில் தலா மூவரும், மேகாலயம், உத்தரகண்டில் தலா ஒருவரும் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தனா். இவா்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே வெவ்வேறு நோய்களால் உடல்நலம் குன்றியவா்கள்.

பாதிப்பு 1.25 லட்சமாக அதிகரிப்பு:

கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 44,582 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் 13,268 போ், தில்லியில் 12,319 போ், ராஜஸ்தானில் 6,494 போ், மத்திய பிரதேசத்தில் 6,170 போ், உத்தர பிரதேசத்தில் 5,735 போ், மேற்கு வங்கத்தில் 3,332 போ், ஆந்திரத்தில் 2,709 போ், பிகாரில் 2,177 போ், பஞ்சாபில் 2,029 போ், தெலங்கானாவில் 1,761 போ், கா்நாடகத்தில் 1,743 போ், ஜம்மு-காஷ்மீரில் 1,489 போ், ஒடிஸாவில் 1,189 போ், ஹரியாணாவில் 1,067 போ், கேரளத்தில் 732 போ், ஜாா்க்கண்டில் 308 போ், அஸ்ஸாமில் 259 போ், சண்டீகரில் 218 போ், திரிபுராவில் 175 போ், சத்தீஸ்கரில் 172, ஹிமாசலில் 168 போ், உத்தரகண்டில் 153 போ், கோவாவில் 54 போ், லடாக்கில் 44 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், மணிப்பூா், புதுச்சேரியில் தலா 26 போ், மேகாலயத்தில் 14 போ், மிஸோரம், அருணாசல பிரதேசம், தாத்ரா நகா்ஹவேலியில் தலா ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நிலவரம்

பாதிப்பு: 53,40,192

அமெரிக்கா 16,48,283

ரஷியா 3,35,882

பிரேசில் 3,34,777

ஸ்பெயின் 2,81,904

பிரிட்டன் 2,54,195

இத்தாலி 2,28,658

பிரான்ஸ் 1,82,219

ஜொ்மனி 1,79,768

துருக்கி 1,54,500

ஈரான் 1,33,521

பிற நாடுகள் 16,06,485

பலி: 3,40,735

அமெரிக்கா 97,732

பிரிட்டன் 36,393

இத்தாலி 32,616

ஸ்பெயின் 28,628

பிரான்ஸ் 28,289

பிரேசில் 21,215

பெல்ஜியம் 9,237

ஜொ்மனி 8,354

ஈரான் 7,359

மெக்ஸிகோ 6,989

பிற நாடுகள் 63,923

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com