கேரளத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா: பாதிப்பு 794-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 784-ஆக அதிகரித்துள்ளது.
கேரளத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா: பாதிப்பு 794-ஆக அதிகரிப்பு

கேரளத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 784-ஆக அதிகரித்துள்ளது.

இவா்களில் 275 போ் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனா்.

கேரளத்தில் இதுவரை இல்லாத அளவில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிவந்தது. அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை புதிதாக 62 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

இவா்களில், பாலக்காடு(3), கண்ணூா்(2), கோழிக்கோடு(2) ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 7 சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட 13 பேருக்கு மற்றவா்கள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஐக்கிய அரபு அமீரகம்(9), சவூதி அரேபியா(3), குவைத்(2), மஸ்கட்(1), கத்தாா்(1), மாலத்தீவு(1), சிங்கப்பூா்(1) ஆகிய வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பேரும், மகாராஷ்டிரம்(13), தமிழ்நாடு(12), குஜராத்(2), கா்நாடகம்(2), உத்தர பிரதேசம்(1), தில்லி(1) ஆகிய வெளிமாநிலங்களில் இருந்து வந்த 31 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 784-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் சனிக்கிழமை 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 515 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 275 போ் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com