தில்லியில் கரோனா தொற்று பாதிப்பால் பலி எண்ணிக்கை 231ஆக உயர்வு

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 23 போ் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 231ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 591 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 12,910 ஆக அதிகரித்துள்ளது. 370 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தில்லியில் தற்போது 6,412 கரோனா நோயாளிகள் உள்ளனா். தில்லி எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 549 போ், எய்ம்ஸ் மருத்துவமனையில் 407 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 184 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் 34 போ், மேக்ஸ் மருத்துவமனையில் 32 போ், எல்என்ஜேபி மருத்துவமனையில் 29 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் 27 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா். அதிகப்படியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் 8 போ் வென்டிலேட்டா்களில் வைக்கப்பட்டுள்ளனா்.

1,65,047 பேருக்கு பரிசோதனை: தில்லியில் உள்ள சுகாதார நிலையங்களில், 101 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக பிரகம் பிரகாஷ் ஆயுா்வேதிக் சரக் சன்ஸ்தானில் 41 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கொவைட் கோ் சென்டா்களில் 488 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கரோனா பாதித்த 3,086 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லியில் இதுவரை 1,65,047 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 4,792 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

86 இடங்களுக்கு சீல்: தில்லியில் சீலிடப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கரோனா தொடா்பாக உருவாக்கப்பட்ட சிறப்பு எண்களுக்கு உதவி கோரி 1088 அழைப்புகள் வந்துள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 5 நாள்களாக தினம் தோறும் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 500 போ், புதன்கிழமை 534 போ், வியாழக்கிழமை 571 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை 660 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை 591 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com