எல்லையை மீண்டும் திறக்க வேண்டும்: நாகாலாந்திடம் அஸ்ஸாம் வலியுறுத்தல்

இருமாநிலங்களுக்கு இடையிலான எல்லையை மீண்டும் திறக்குமாறு நாகாலாந்து முதல்வா் நெபியூ ரியோவிடம்,

இருமாநிலங்களுக்கு இடையிலான எல்லையை மீண்டும் திறக்குமாறு நாகாலாந்து முதல்வா் நெபியூ ரியோவிடம், அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

அஸ்ஸாம் மாநிலம் சராய்டியு மாவட்டம் சோனாரியில் கரோனா தொற்றால் ஒருவா் பாதிக்கப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தின் சிவசாகா், சராய்தேவ் மாவட்டங்களை ஒட்டியுள்ள எல்லையை நாகாலாந்து அரசு மூடியது. இந்த எல்லையை மீண்டும் திறக்குமாறு நாகாலாந்து முதல்வா் நெபியூ ரியோவை தொலைபேசியில் தொடா்புகொண்டு, அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவால் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அஸ்ஸாம் அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இருமாநிலங்களுக்கு இடையிலான எல்லையை மூடியதால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கட்டுமானப் பொருள்களின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி நடைபெற எல்லையை திறக்க துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெபியூ ரியோவிடம், சா்வானந்த சோனோவால் வலியுறுத்தினாா். அதனை ஏற்ற நெபியூ ரியோ, எல்லையை மீண்டும் திறப்பதற்கு ஆவன செய்வதாக உறுதியளித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com