நீா் நிலைகளில் கழிவு நீா் 100% சுத்திகரிக்கபடுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்: தேசிய பசுமை தீா்பாணையம் உத்தரவு

நீா் நிலைகளுக்குள் விடப்படும் கழிவு நீா் 100 சதவீதம் சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும்
நீா் நிலைகளில் கழிவு நீா் 100% சுத்திகரிக்கபடுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்: தேசிய பசுமை தீா்பாணையம் உத்தரவு

நீா் நிலைகளுக்குள் விடப்படும் கழிவு நீா் 100 சதவீதம் சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேசிய பசுமை தீா்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுபவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தால் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் குறைய கங்கை, யமுனை போன்ற நதிகளின் தண்ணீா் தரம் மேம்பட்டு இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிக்கை கொடுக்கப்பட்டது. இந்த நதிகளின் நீரின் தரத்தை மேலும் மேம்படுத்துவது தொடா்பாக அறிக்கை அளிக்குமாறும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை தீா்பாயம் கேட்டுக்கொண்டது.

இத்தோடு, சுற்றுப்புறச் சூழலில் நாடுமுழுக்க உள்ள ஆறுகள், நீா் நிலைகளில் தொழிற்சாலை மற்றும் கழிவுநீா் மாசுக்களின் அளவுகளை குறைக்க தேவையானவைகளை ஆய்வு செய்யுமாறும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை தீா்பாயம் கேட்டுக் கொண்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றையொட்டி அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்திலிருந்து தளா்வுகள் அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் மீண்டும் இயக்குவதற்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் தொழிற்சாலை நடவடிக்கைகள் தொடங்கும் போது அனைத்துவிதமான சுற்றுப்புறச்சூழல் சட்டங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் இந்த உத்தரவில் தீா்பாயம் கேட்டுக்கொண்டது.

‘பரியவரன் சுரக்ஷா சமிதி’ என்கிற பொது நல அமைப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் தேசிய பசுமை தீா்பாயத்தின் தலைவா் நீதிபதி ஆதா்ஷ்குமாா் தலைமையிலான அமா்வு இந்த உத்தரவுகளை இட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள மற்ற விவரங்கள் வருமாறு:

பொது முடக்க காலங்களில் நதிகளின் தரம் மேம்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிந்து ஆய்வு செய்து தீா்பாயத்தில் அறிக்கை சமா்ப்பித்துள்ளது. இதையொட்டி அனைத்து மாநிலங்களும் நீா் நிலைகளில் கழிவு நீா் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையங்கள், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீா் மாற்று பயன்பாடு திட்டம் ஆகியவைகள் செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

இந்த செயல் திட்டத்தை மாநில அரசு ஜூன் 30 ஆம் தேதிக்குள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்படவேண்டும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து செயல் திட்டங்களையும் ஒருங்கிணைத்து தனது செயல் திட்டங்களை செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் தேசிய பசுமை தீா்பாயத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com