மே 31 ஊரடங்கு முடிவுக்கு வராது: மகாராஷ்டிர முதல்வர்

மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரம். அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 47 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் 33,786 பேர் சிகிச்சையில் உள்ளனர். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசியதாவது:

"மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்துவிடும் என்று கூறிவிட முடியாது. நாம் எப்படி முன்நோக்கி நகர்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். வைரஸ் பெருக்கம் இருக்கும் என்பதால் வரவிருக்கும் காலம் என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் எப்போதுமே உங்களுடன் துணை நிற்போம் என்பதை மருத்துவத் துறையினருக்கு உறுதியளிக்கிறேன்.

இன்று காலை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியிடம் பேசினேன். உள்நாட்டு விமான சேவைக்குத் தயாராவதற்குக் கூடுதல் அவகாசம் கோரியுள்ளேன்.

கரோனாவுக்கு எதிரான போராட்டம் தற்போது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால், அச்சம் கொள்ளத் தேவையில்லை. கூடுதல் மருத்துவ வசதிகளுடன் மாநில அரசு தயாராக உள்ளது. மழைக் காலத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com