ராஜஸ்தானில் மேலும் 70 பேருக்கு கரோனா உறுதி: மொத்த பாதிப்பு 7,100

ராஜஸ்தானில் மேலும் 70 பேருக்கு கரோனா உறுதி: மொத்த பாதிப்பு 7,100

ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனா தொற்றுக்குப் பாதித்தோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7,100 ஆகவும், பலி எண்ணிக்கை 163 ஆகவும் உயர்ந்துள்ளது என்று சுகாதார கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

70 புதிய வழக்குகளில், பாலி 25 வழக்குகளையும், சிகாரில் 22, ஜெய்ப்பூரில் 11, கோட்டாவில் ஏழு, ஆல்வாரில் ஐந்து, தோல்பூர் மற்றும் ஸ்வாய் மாதோபூரில் தலா ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் இதுவரை 3,856 நோயாளிகள் குணமடைந்து, அதில் 3,420 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். தற்போது வரை மாநிலத்தில் 3,081 வழக்குகள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். 

கரோனா பாதிப்புகளில் அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் 78 இறப்புகளும், 1,826 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜோத்பூரில் 1,224 வழக்குகளும் 24 இறப்புகளும் பதிவாகியுள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தோர் 1,701 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com