கரோனா தொற்றுடைய மாநிலமாக மாறியது நாகாலாந்து

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த நாகாலாந்தில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளதாக அம்மாநில முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். 
கரோனா தொற்றுடைய மாநிலமாக மாறியது நாகாலாந்து

கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த நாகாலாந்தில் மூன்று பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளதாக அம்மாநில முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். 

இதில், திமாபூரில் இருவருக்கும், கோஹிமாவிலிருந்து ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இவர்கள் மூவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள்.

சென்னையில் இருந்து நாகாலாந்துக்கு சென்ற முதல் சிறப்பு ரயிலில் பயணித்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் இன்று சிலரின் முடிவுகள் வந்த நிலையில் மூவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முதல்வர் நீபியு ரியோ தெரிவித்தார்.

தற்போது யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் மட்டும் இதுவரை ஒருவருக்குக் கூட கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com