3,060 சிறப்பு ரயில்களில் 40 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பினர்

இதுவரை 3,060 சிறப்பு ரயில்களில், சுமார் 40 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3,060 சிறப்பு ரயில்களில் 40 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பினர்


புது தில்லி: இதுவரை 3,060 சிறப்பு ரயில்களில், சுமார் 40 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக, குஜராத்(853), மகாராஷ்டிரம்(550), பஞ்சாப்(333), உத்தர பிரதேசம்(221), தில்லி(121) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 237 ரயில்களில் 3.1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கடந்த 1-ஆம் தேதியில் இருந்து இதுவரை 3,060 சிறப்பு ரயில்களில் 40 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு சிறப்பு ரயிலையும் இயக்குவதற்கான மொத்த செலவில், 85 சதவீதத்தை ரயில்வே துறையும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஏற்கின்றன என்று அந்த அதிகாரி கூறினார்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், வாழ்வாதாரத்தை இழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பத்தினருடன் நடந்தே சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். இவ்வாறு செல்லும்போது ஆங்காங்கே ஏற்பட்ட விபத்துகளில் சிலர் உயிரிழந்தனர். 

இதையடுத்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக, கடந்த 1-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com