400 ஊழியர்களை வெளியேற்றும் சி.டி.எஸ். நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் 400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
400 ஊழியர்களை வெளியேற்றும் சி.டி.எஸ். நிறுவனம்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் 400 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், துணைத் தலைவர், மேலாளர்கள் உள்ளிட்டோரும் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'தற்போதைய பொருளாதார நிலவரப்படி, நிறுவனத்தின் நிதி நிலைமையை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகம் முழுவதும் உள்ள எங்களது நிறுவனக் கிளைகளில் 2.90 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், நிறுவனத்தின் கொள்கைகளின்படி, 'தன்னார்வ பிரிப்புத் திட்டத்தின்' கீழ் 400 ஊழியர்களை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்தவொரு திட்டத்திலும் ஈடுபடாத பணியாளர்களை மட்டும் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். 

முன்னதாக, பெரும்பாலான கிளைகளில் மூத்த அதிகாரிகளுக்கு 25% வரையிலான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com