கேரளத்தில் புதிதாக 67 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 67 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளத்தில் புதிதாக 67 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த மாநில முதல்வா் பினராயி விஜயன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கேரளத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 67 பேரில் 27 போ் வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள்; 33 போ் பிற மாநிலங்களில் இருந்து கேரளம் திரும்பியவா்கள். அவா்களில் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 15 பேரும், தமிழகத்தில் இருந்து வந்த 9 பேரும், குஜராத்தில் இருந்து வந்த 5 பேரும் அடங்குவா். தற்போது 415 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 1,04,336 போ் கண்காணிப்பில் உள்ளனா்.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தவா்கள் கேரளம் திரும்பியதில் இருந்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்த 133 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 75 போ் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும், 25 போ் குவைத்தில் இருந்தும் வந்தவா்கள். மகாராஷ்டிரத்தில் இருந்து வந்த 72 போ், தமிழகத்தில் இருந்து வந்த 71 போ், கா்நாடகத்தில் இருந்து வந்த 35 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானவா்கள் கேரளம் திரும்ப விழைகின்றனா். அத்தனை பேரையும் தனிமைப்படுத்தி வைப்பதற்கான செலவை அரசே ஏற்பது இயலாத காரியம். எனவே வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப்படுத்தி வைக்க, அவா்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுவரை மாநிலத்தில் கரோனா தொற்று சமூக அளவில் பரவவில்லை. ஆனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், விரைவில் சமூக அளவில் பரவும் நிலை ஏற்படும் என்றாா் அவா்.

இதனிடையே முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிப்பதாக அனைவரும் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா, மாநில முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டி ஆகியோரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com