மே 31-க்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்படும்: எடியூரப்பா தகவல்

மே 31 ஆம்  தேதிக்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மே 31-க்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கப்படும்: எடியூரப்பா தகவல்

மே 31 ஆம்  தேதிக்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட அதே வேளையில், கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளன. 

இந்நிலையில், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் கடைகள் திறக்க, மாநில எல்லைக்குகள் பேருந்து மற்றும் ரயில்களை இயக்க என சில சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

மேலும், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து பொதுமக்கள் மே 31 வரை கர்நாடகத்துக்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என முதல்வர் எடியூரப்பா கூறியிருந்தார். 

இதையடுத்து, மே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மே 31 ஆம்  தேதிக்குப் பிறகு கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்க முடிவு செய்துள்ளதாக எடியூரப்பா தகவல் தெரிவித்துள்ளார். எனினும், பிரதமரின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com