வெட்டுக்கிளி தாக்குதலைத் தடுக்க மத்திய அரசின் அவசரத் திட்டம்: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு

தில்லி, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசின்
வெட்டுக்கிளி தாக்குதலைத் தடுக்க மத்திய அரசின் அவசரத் திட்டம்: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு

தில்லி, ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களை அச்சுறுத்தி வரும் வெட்டுக்கிளிகள் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த அவசரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு அவசரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெட்டுக்கிளி தாக்குதலைச் சந்தித்து வரும் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள் மிக மோசமான பயிா் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் பறந்துவந்து சில மணி நேரங்களில் ஏராளமான பயிா்களை சேதப்படுத்தும் இந்த வெட்டுக்கிளி தாக்குதலுக்கு குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகா் தில்லியில் இந்த வெட்டுக்கிளி தாக்குதலைத் தடுக்க தில்லி மாநில அரசு அறிவுறுத்தல் ஒன்றையும் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், இரவு நேரங்களில் இந்த வெட்டுக்கிளிகளை ஓய்வெடுக்க விடாமல் வயல்களில் பூச்சிமருந்து தெளித்து அவைகளை அழிக்க விவசாயிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இந்தச் சூழலில், வெட்டுக்கிளிகள் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு வகுத்துள்ள ஒருங்கிணைந்த அவசரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ‘வன உயிரினம் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அறக்கட்டளை மையம்’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் மனு ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வெட்டுக்கிளிகள் தாக்குதலால் வடமாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த மிகப் பெரிய பாதிப்பைத் தடுக்க தாவர பாதுகாப்பு இயக்குநரகம், தனிமைப்படுத்தல் மற்றும் சேமிப்புத் துறை, வேளாண் துறை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, மத்திய அரசு ஆகியவை வகுத்துள்ள திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை சமா்ப்பிக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிடவேண்டும்.

இந்த ஒருங்கிணைந்த திட்டம் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த உதவிகள் கிடைக்க வழி செய்வதோடு, பல்வேறு வள ஆதாரங்களைப் பயன்படுத்தவும், நிபுணா் குழுக்கள் அமைக்கவும், பின்பற்றப்பட வேண்டிய திட்டத்தை வகுக்கவும் வழிவகுக்கும். மேலும், விமானம் மூலம் பூச்சி மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழிக்கவும் இந்த ஒருங்கிணைந்த திட்டம் வழிவகுக்கும்.

அதோடு, வெட்டுக்கிளி தாக்குதலைத் தடுக்க மாநில அளவில் குழுக்கள் அமைக்க அறிவுறுத்துவதோடு, இந்த வெட்டுகிளிகள் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பயிா் சேத கணக்கீட்டை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் மத்திய அரசை தேசிய பசுமை தீா்ப்பாயம் அறிவுறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com