கரோனா அச்சத்தால் குழந்தையின் உடலை வாங்க மறுத்த குடும்பம்; இறுதிச் சடங்கை செய்த அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கையால் புகழ்பெற்ற நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்த நிலையில், இறுதிச் சடங்கை
கரோனா அச்சத்தால் குழந்தையின் உடலை வாங்க மறுத்த குடும்பம்; இறுதிச் சடங்கை செய்த அதிகாரிகள்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கையால் புகழ்பெற்ற நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்த நிலையில், இறுதிச் சடங்கை அதிகாரிகளே மேற்கொண்டதன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் சவன்டியா கிராமத்தைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர் சில நாள்களுக்கு முன்பு மும்பையில் இருந்து திரும்பிய நிலையில் குழந்தை உட்பட மூவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனையில், குழந்தையின் தந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. தாய்க்கும், குழந்தைக்கும் கரோனா இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இது குறித்து மண்டல் பகுதியின் சுகாதாரத் துறை மருத்துவர் பிரகாஷ் கூறுகையில்,  தனிமைப்படுத்தும் மையத்தில், நீர்ச்சத்துக் குறைவால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு குழந்தை உயிரிழந்தது. நடைமுறைகள் முடிந்து குழந்தையின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் தயாராக இருந்தனர். வியாழக்கிழமை மதியம் வரை காத்திருந்தும், குழந்தையின் உடலை வாங்க யாரும் வரவில்லை.

இதையடுத்து, மண்டல் பகுதியின் துணை மண்டல நீதிபதி மணிபால் சிங் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், குழந்தையின் குடும்பத்தாரை வரவழைத்து, குழந்தைக்கு கரோனா இல்லை, எனவே உடலை வாங்கிச் சென்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளுமாறு எடுத்துக் கூறினர். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இதையடுத்து, நீதிபதி மஹிபால் சிங், குழந்தையின் உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, தானே குழி தோண்டி, குழந்தையின் இறுதிச் சடங்கை மேற்கொண்டார்.

தந்தைக்கு கரோனா இருப்பதால் குழந்தைக்கும் கரோனா இருக்கும் என்றும், அதற்கு இறுதிச் சடங்கு செய்தால் தங்களுக்கும் நோய் பரவிவிடும் என்று உறவினர்கள் அஞ்சினர். எவ்வளவோ எடுத்துச் சொல்லியில் இறுதிச் சடங்கு செய்ய முன்வரவில்லை. எனவே, நாங்களே குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை மேற்கொண்டோம் என்கிறார் மஹிபால் சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com