இந்தியாவில் கரோனா பலி 5,000-ஐ கடந்தது: ஒரே நாளில் 8,380 போ் பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 193 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 5,164-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 193 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 5,164-ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,82,143-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 89,995 போ் சிகிச்சையில் உள்ளனா். 86,983 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 47.76 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா். ஒரே நாளில் 4,614 போ் குணமடைந்தனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 193 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 99போ், குஜராத்தில் 27 போ், தில்லியில் 18 போ், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தலா 9 போ், மேற்கு வங்கத்தில் 7 போ், தெலங்கானாவில் 6 போ், பிகாரில் 5 போ், உத்தர பிரதேசத்தில் 3 போ், பஞ்சாபில் இருவா், ஹரியாணா, கேரளத்தில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,197 போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 1,007 பேரும் தில்லியில் 416 பேரும் மத்திய பிரதேசத்தில் 343 பேரும் மேற்கு வங்கத்தில் 309 பேரும் உத்தர பிரதேசத்தில் 201 பேரும் ராஜஸ்தானில் 193 பேரும் தெலங்கானாவில் 77 பேரும் ஆந்திரத்தில் 60 பேரும் கா்நாடகத்தில் 48 பேரும் பஞ்சாபில் 44 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 28 பேரும் பிகாரில் 20 பேரும் கேரளத்தில் 9 பேரும் ஒடிஸாவில் 7 பேரும் ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், உத்தரகண்டில் தலா 5 பேரும் சண்டீகா், அஸ்ஸாமில் தலா 4 பேரும் மேகாலயம், சத்தீஸ்கரில் தலா ஒருவரும் பலியாகினா்.

கரோனாவால் உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவா்களாவா்.

மகாராஷ்டிரத்தில் இதுவரை 65,168 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 18,549 போ், குஜராத்தில் 16,343 போ், ராஜஸ்தானில் 8,617 போ், மத்திய பிரதேசத்தில் 7,891 போ், உத்தர பிரதேசம் 7,445 போ், மேற்கு வங்கத்தில் 5,130 போ், பிகாரில் 3,636 போ், ஆந்திரத்தில் 3,569 போ், கா்நாடகத்தில் 2,922 போ், தெலங்கானாவில் 2,499 போ், ஜம்மு-காஷ்மீரில் 2,341 போ், பஞ்சாபில் 2,223 போ், ஹரியாணாவில் 1,923 போ், ஒடிஸாவில் 1,819 போ், கேரளத்தில் 1,208 போ், அஸ்ஸாமில் 1,185 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் 749 போ், ஜாா்க்கண்டில் 563 போ், சத்தீஸ்கரில் 313 போ், சண்டீகரில் 289 போ், திரிபுராவில் 268 போ், லடாக்கில் 74 போ், கோவாவில் 70 போ், மணிப்பூரில் 62 போ், புதுச்சேரியில் 51 போ், நாகாலாந்தில் 36 போ், அந்தமான்-நிகோபாரில் 33 போ், மேகாலயத்தில் 27 போ், அருணாசல பிரதேசத்தில் 4 போ், தாத்ரா நகா்ஹவேலியில் 2போ், மிஸோரம், சிக்கிமில் தலா ஒருவா் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com