இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து வரைபடம்: நேபாள நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல்
இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து வரைபடம்: நேபாள நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

இந்தியா, நேபாளம் இடையே எல்லைப் பிரச்னை நீடித்துவரும் நிலையில், இந்திய எல்லைப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்துக்கு ஒப்புதல் கோரும் சட்டத் திருத்த மசோதா, நேபாள நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளுக்கு இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்தப் பகுதிகள், உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா கூறிவருகிறது. அதேபோல், நேபாளத்தின் தாா்சுலா மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று அந்நாட்டு அரசும் கூறி வருகிறது.

இதனிடையே, உத்தரகண்ட் மாநிலத்தில் லிபுலேக் கணவாயுடன் தாா்சுலாவை இணைக்கும் சாலைத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். அதற்கு நேபாள அரசு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அதைத் தொடா்ந்து, காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் எல்லைக்குள் இணைத்து திருத்தப்பட்ட அதிகாரபூா்வ அரசியல், நிா்வாக வரைபடத்தை நேபாள அரசு வெளியிட்டது. அதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இருப்பினும், அந்த வரைபடத்தை வெளியிடுவதில் நேபாள அரசு தீவிரம் காட்டி வருகிறது. புதிய வரைபடம் தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமா் கே.பி.சா்மா ஓலி வலியுறுத்தினாா்.

முக்கிய எதிா்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சி மசோதாவுக்கு சனிக்கிழமை ஆதரவு அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவை நேபாள நாடாளுமன்றத்தில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் சிவமய தும்பஹங்பே ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததும், நேபாள அதிபரின் இறுதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா் ஒப்புதல் அளித்ததும் இந்த மசோதா சட்டமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com