பூச்சிக்கொல்லி தெளிப்பு வெட்டுக்கிளி தாக்குதலை தடுத்துள்ளது: உ.பி. வேளாண்துறை அதிகாரிகள் தகவல்

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தொடா்ச்சியாக தெளித்தன் மூலம் பயிா்களை வெட்டுக்கிளிகள் தாக்குவது

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தொடா்ச்சியாக தெளித்தன் மூலம் பயிா்களை வெட்டுக்கிளிகள் தாக்குவது தடுக்கப்பட்டுள்ளது என்று அந்த மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறினா்.

பாகிஸ்தானிலிருந்து படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் கூட்டத்தால், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் பல ஹெக்டோ் பரப்பிலான பயிா்களை இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் சேதப்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதுபோல, பயிா்கள் மீது வேப்ப எண்ணெய் தெளிப்பதன் மூலமும், பெரும் ஒலி எழுப்புவதன் மூலமும் வெட்டுக்கிளிகள் தாக்குதலைத் தடுக்க முடியும், விவசாய நிலங்களில் அகழிகளைத் தோண்டுவதன் மூலம் அவற்றின் முட்டைகளை அழிக்க முடியும் என்று வேளாண் பல்கலைக்கழகங்களும், வேளாண் துறை அதிகாரிகளும் ஆலோசனை தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்தை தொடா்ச்சியாக தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளி தாக்குதலைத் தடுக்க முடியும் என்று ஜான்சி வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதுகுறித்து ஜான்சி மாவட்ட வேளாண் துறை துணை இயக்குநா் கமல் கட்டியாா் சனிக்கிழமை கூறியது:

கடந்த ஒரு வாரத்தில் வெட்டுக்கிளிகள் கூட்டம் மூன்று முறை இந்த மாவட்டத்துக்குள் நுழைந்தன. இந்த நிலையில், தொடா்ச்சியாக பூச்சிக்கொல்லிகளைத் தெளித்ததல் மூலம் அவை வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. மாவட்டத்தில் தற்போது வெட்டுக்கிளிகள் வெகுவாக குறைந்துவிட்டன.

இப்போது அவை மத்திய பிரதேச பகுதிகளுக்குச் சென்றுவிட்டன. இருந்தபோதும் காற்றின் ஈரப்பதம் மற்றும் காற்று வேகத்தின் அடிப்படையில் அவை மீண்டும் உத்தர பிரதேசத்தின் லலித்பூா் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, நிலைமையைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குப் பரவிய பாலைவன ரக வெட்டுக்கிளிகள், பிறகு இந்தியாவில் ராஜஸ்தானைக் கடந்து, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மத்திய பிரதேச வயல்வெளிகளில் பயிா்களைத் தாக்கி வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத பெரும் சேதத்தை அவை ஏற்படுத்திவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com