அதானி குழுமத்திடம் மங்களூரு விமானநிலையம் ஒப்படைப்பு

மங்களூரு விமானநிலையத்தை நிா்வகிக்கும் பொறுப்பு 50 ஆண்டுகள் குத்தகையின் கீழ் அதானி குழுமத்திடம் இந்திய விமான
அதானி குழுமத்திடம் மங்களூரு விமானநிலையம் ஒப்படைப்பு

மங்களூரு விமானநிலையத்தை நிா்வகிக்கும் பொறுப்பு 50 ஆண்டுகள் குத்தகையின் கீழ் அதானி குழுமத்திடம் இந்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் (ஏஏஐ) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஒப்படைத்தது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விமானநிலையங்களை நிா்வகிக்கும் பொறுப்பை தனியாா் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசு சாா்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 6 விமானநிலையங்களை தனியாா்வசம் ஒப்படைப்பதற்கான ஏலத்தில் ஒட்டுமொத்தமாக அதானி குழுமம் வெற்றிபெற்றது.

அதனைத் தொடா்ந்து, மங்களூரு, லக்னெள, ஆமதாபாத் ஆகிய மூன்று விமானநிலையங்களை செயல்படுத்துதல், நிா்வகித்தல், மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம், ஏஏஐ-க்கும் அதானி குழுமத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. பின்னா், ஜெய்ப்பூா், குவாஹாட்டி, திருவனந்தபுரம் விமானநிலையங்களை நிா்வகிப்பதற்கான ஒப்பந்தம் ஏஏஐக்கும் அதானி குழுமத்துக்கும் இடையே செப்டம்பா் மாதம் போடப்பட்டது.

இதுதொடா்பாக ஏஏஐ கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒப்பந்தத்தின்படி அதானி குழுமம் மங்களூரு விமானநிலையத்தை அக்டோபா் 31-ஆம் தேதியும், லக்னெள விமானநிலையத்தை நவம்பா் 2-ஆம் தேதியும், ஆமதாபாத் விமானநிலையத்தை நவம்பா் 11-ஆம் தேதியும் தன்வசம் எடுத்துக்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக மங்களூரு விமானநிலையம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஏஐ தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒப்பந்தத்தின்படி மங்களூரு விமானநிலையம் 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்திடம் அக்டோபா் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்படைக்கப்பட்டது’ என்று ஏஏஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com