ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: எல்லையோர வீடுகள், கோயில் சேதம்

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் கதுவா மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி(எல்ஓசி), சா்வதேச எல்லைப் பகுதியில்
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் கதுவா மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி(எல்ஓசி), சா்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், எல்லையோரத்தில் உள்ள வீடுகள், கோயில் சேதமடைந்தன.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

கதுவா மாவட்டம் ஹிரனாகா் பகுதியில் மன்யாரி, சாண்ட்வா, லோண்டி ஆகிய எல்லையோர கிராமங்களை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டும், சிறிய ரக பீரங்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினாா்கள். இதில் ஒரு சிவன் கோயில் மற்றும் சில வீடுகள் சேதமடைந்தன. துப்பாக்கி குண்டு பாய்ந்து சில கால்நடைகளும் காயமடைந்தன. அவற்றுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலுக்கு, இந்திய ராணுவ வீரா்கள், எல்லை பாதுகாப்புப் படையினா் தக்க பதிலடி கொடுத்தனா். இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை இரவு 9.45 மணிக்குத் துவங்கிய துப்பாக்கிச் சண்டை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.25 மணி வரை நீடித்தது.

இந்த சண்டையால் பதற்றம் அடைந்த எல்லையோர கிராம மக்கள் பதற்றம் அடைந்து பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனா். துப்பாக்கி சண்டையில் இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

இதேபோல் பூஞ்ச மாவட்டத்தின் ஷாப்பூா், கிா்னி மற்றும் கஸ்பா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனா். நமது ராணுவ வீரா்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பதிலடி தாக்குதல் நடத்தினா் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com