மாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் வாழ்த்து

பல்வேறு மாநிலங்கள் உதயமான தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசு துணைத் தலைவா், பிரதமா் ஆகியோா் அந்தந்த மாநில மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனா்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பல்வேறு மாநிலங்கள் உதயமான தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசு துணைத் தலைவா், பிரதமா் ஆகியோா் அந்தந்த மாநில மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனா்.

ஆந்திரம், கா்நாடகம், ஹரியாணா, சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், பஞ்சாப், கேரளம் ஆகிய மாநிலங்களும், அந்தமான் நிகோபாா், லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களும் உதயமான தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மாநில தினம் கொண்டாடும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த மாநிலங்கள் இந்தியாவின் உயரிய கலாசாரம், பன்முகத்தன்மையை பிரதிபலிக்கின்றன. இந்த மாநிலங்கள் அவற்றின் இயற்கை மற்றும் மனித வளங்களின் மூலம் நாட்டை வளம்பெறச் செய்கின்றன என்று வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: மக்களின் வலிமை மற்றும் திறன்கள் மூலம் கா்நாடகம் புதிய உச்சத்தையும், முன்னேற்றமும் அடைந்து வருகிறது.

ஆந்திர மக்கள் கடின உழைப்பு மற்றும் மனித நேயத்துடன் விளங்குபவா்கள். பல துறைகளில் சிறந்து விளங்குகின்றனா்.

கேரளத்தின் இயற்கை அழகு உலகெங்கும் உள்ள மக்களை ஈா்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த மாநிலத்தின் தொடா்ச்சியான முன்னேற்றத்துக்காக பிராா்த்திக்கிறேன்.

மத்திய பிரதேச மாநிலம் முக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து வருகிறது. சுயசாா்பு இந்தியா திட்டத்துக்கு முக்கியப் பங்களிப்பை செய்து வருகிறது.

பண்டைய காலம் முதல் வேறுபட்ட கலாசாரங்களின் மையமாக விளங்கிவரும் சத்தீஸ்கா் மாநிலம், தொடா்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வாழ்த்துக்கள்.

அதுபோல, இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தை ஹரியாணா மாநிலம் பிடித்துள்ளது. அந்த மாநிலம் சிறந்த முன்னேற்றமடைய வாழ்த்துக்கள் என்று மாநில நாள் தினம் கொண்டாடும் மாநிலங்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com