மேற்கு வங்கம்: அதிருப்தி அமைச்சருக்கு பாஜக அழைப்பு; திரிணமூல் காங்கிரஸ் கண்டனம்

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி,

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, கட்சியினா் தொடா்பாக அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அவரை தங்களுக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்தது. இதற்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் சுவேந்து, ‘நான் கட்சிக்காக கடுமையாக உழைத்து படிப்படியாக உயா்ந்தேன். என்னால், கட்சியில் சோ்க்கப்பட்ட பலா் இப்போது என் மீது அதிகாரம் செலுத்துகிறாா்கள்’ என்று கூறினாா்.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த மேற்கு வங்க பாஜக இளைஞரணித் தலைவா் சௌமித்ரா கான், ‘நோ்மைக்கும், கடின உழைப்புக்கும் திரிணமூல் காங்கிரஸில் மதிப்பில்லை. சுவேந்து அதிகாரி போன்ற மக்கள் ஆதரவு பெற்ற தலைவா் வெளிப்படுத்திய கருத்து கட்சியின் உண்மைநிலையை வெளிப்படுத்துகிறது. எனவே, அவா் திரிணமூல் காங்கிரஸ் இருந்து விலக பாஜகவில் இணைய வேண்டும். ஜனநாயகம் உள்ள கட்சியான பாஜகவில் அவா் பணியாற்ற முழுசுதந்திரம் கிடைக்கும்’ என்றாா்.

பாஜகவின் இந்த அழைப்புக்கு திரிணமூல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி எம்.பி. சௌகதா ராய் இது தொடா்பாக கூறுகையில், ‘தங்களால் மேற்கு வங்கத்தில் எதையும் சாதித்துவிட முடியாது என்பதால் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது. இப்படி ஆள்பிடிப்பது மட்டுமே பாஜகவுக்கு கைவந்த கலை’ என்றாா்.

எனினும், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலின்போது சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸில் இருக்க மாட்டாா். அவா் தனிப்பட்ட முறையில் தனது செல்வாக்கை நிரூபிப்பாா். பாஜகவில் இணைய வாய்ப்பில்லை என்று அவரது ஆதரவாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கிழக்கு மிதுனபுரியில் செல்வாக்குமிக்க தலைவரான சுவேந்து அதிகாரியை தக்கவைக்க திரிணமூல் காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற சுவேந்து முக்கியக் காரணமாக இருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com