இந்தியா வந்தடைந்தது 3 ரஃபேல் விமானங்கள்

சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப் படையை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இரவு இந்தியா வந்தடைந்தது.
ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்


சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய விமானப் படையை மேலும் பலப்படுத்தும் வகையில் மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இரவு இந்தியா வந்தடைந்தது.

இந்த விமானங்கள் பிரான்ஸிலிருந்து இன்று காலை புறப்பட்டு எங்கேயும் நிற்காமல் இரவு 8.14 மணிக்கு இந்தியா வந்தடைந்ததாக அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்டமாக ஜூலை 28-இல் 5 விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. அவை இந்திய விமானப் படையில் செப்டம்பர் 10-ம் தேதி அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.ஏற்கெனவே வந்தடைந்த 5 ரஃபேல் போர் விமானங்கள் குறுகிய காலகட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்து, பதற்றமான சூழல் நிலவி வரும் லடாக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது வந்த 3 போர் விமானங்களும், விமானப் படையில் இணைக்கப்பட்டு 8 ரஃபேல் போர் விமானங்களாக உயர்ந்துள்ளது.

2016-இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கையெழுத்திட்ட ரூ. 60,000 கோடி ஒப்பந்தத்தின்படி, 2022 மத்தியில் மொத்தம் 36 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடையும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com