வேளாண் சட்டம்: பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாபில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாபில் ரயில் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
பஞ்சாபில் ரயில் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாபில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

எனினும் அவர்களது போராட்டத்தால் நிலக்கரி மற்றும் அனல்மின் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்படுவதால், கடந்த 21-ஆம் தேதி போராட்டத்தைக் கைவிடுவதாகவும், சரக்கு ரயில்களை மட்டும் அனுமதிக்கப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஞ்சாபில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சரக்கு ரயில்கள் அனுமதிக்கப்பட்டன. எனினும் ஒருசில இடங்களில் சரக்கு ரயில்களை விவசாயிகள் மறித்ததால், ரயில்சேவை மீண்டும் நிறுத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமிர்தசரஸ் பகுதி அருகே நிலக்கரி எடுத்துச் செல்லப்படும் அனல் மின்நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இது குறித்து பேசிய கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் சமிதியின் தலைவர் சத்னம் சிங் பன்னு, நவம்பர் 6 ஆம் தேதி ஜான்டியாலா குரு ரயில் பாதையில் இருந்து போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் மறு ஆய்வுக் கூட்டத்தின்போது விவாதிக்க உள்ளோம். எனினும் ஜான்டியாலா குரு பகுதியில் உள்ள ரயில் பாதை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் ரயில்கள் தடை செய்யப்படுவதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com