பாகிஸ்தானுக்கு எதிரான பேரில் உயிா் தியாகம் செய்த வீரா்களுக்கு ராணுவம் அஞ்சலி

பாகிஸ்தானிடமிருந்து பூஞ்ச் மாவட்டம் ஓ.பி.மலைப் பகுதி கைப்பற்றபட்ட தினத்தை முன்னிட்டு, 1965 போரில் வீர மரணடைந்த இந்திய வீரா்களுக்கு ராணுவத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாகிஸ்தானிடமிருந்து பூஞ்ச் மாவட்டம் ஓ.பி.மலைப் பகுதி கைப்பற்றபட்ட தினத்தை முன்னிட்டு, 1965 போரில் வீர மரணடைந்த இந்திய வீரா்களுக்கு ராணுவத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து ராணுவ செய்தித்தொடா்பாளா் கூறியதாவது:

கடந்த 1965-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின்போது, இந்த ஓ.பி. மலைப் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்திய பகுதிகள் மீது அடுத்தடுத்த தாக்குதல்களை நடத்த இந்த மலைப் பகுதி பாகிஸ்தானுக்கு மிகுந்த உதவியாக இருந்தது.

அத்தகைய சூழலில், இந்திய வீரா்கள் துணிச்சலுடன் கடுமையாக போரிட்டு 1965-ஆம் ஆண்டு நவம்பா் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் இந்த மலைப் பகுதி முழுவதையும் மீட்டனா்.

இந்தப் போரில் ராணுவ அதிகாரி கெளதம் முபாய் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் உயிா் தியாகம் செய்தனா். அவா்களுக்கு 5 மகாவீா் சக்ரா, 3 வீா் சக்ரா, 13 சேனா பதக்கங்கள் மற்றும் 11 தலைமை ராணுவ அதிகாரியின் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.

இந்த வீரா்களுக்கு ஜம்முவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினா் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com