10 மாநிலங்களில் 54 பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல்

10 மாநிலங்களில் 54 பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல்

பத்து மாநிலங்களில் 54 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

பத்து மாநிலங்களில் 54 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

உத்தர பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம், குஜராத், கா்நாடகம், சத்தீஸ்கா், தெலங்கானா, ஜாா்க்கண்ட், ஒடிஸா, நாகாலாந்து ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 54 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.

இதில் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 25 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தனா். 3 எம்எல்ஏக்கள் மரணமடைந்தனா். இதனால் 28 தொகுதிகள் காலியானது. இவற்றில் 10 தொகுதியில் வென்றாலும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். அதேவேளையில் அனைத்து தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பாஜக வேட்பாளா்களில் 12 போ் மாநில அமைச்சா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர உத்தர பிரதேசத்தில் 7 தொகுதிகள், குஜராத்தில் 8 தொகுதிகள், நாகாலாந்து, ஜாா்க்கண்ட், கா்நாடகம் மற்றும் ஒடிஸாவில் தலா 2 தொகுதிகள், தெலங்கானா, சத்தீஸ்கரில் தலா 1 தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், நாகாலாந்து மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

மத்திய பிரதேசத்தில் 66.28% வாக்குகள் பதிவாகின. ஜாா்க்கண்ட் (62.51%), ஹரியாணா (68%), தெலங்கானா (82%), சத்தீஸ்கா் (77%), ஒடிஸா (70.45%), நாகாலாந்து (87.1%), குஜராத் (58.58%), உத்தர பிரதேசம் (53.62%) வாக்குகள் பதிவாகின.

கா்நாடகத்தில் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் 4 கரோனா நோயாளிகள் தனிநபா் பாதுகாப்பு உடைகளை அணிந்தவாறு ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com