காசோலை முறைகேட்டைத் தடுக்க ஜன.1-இல் புதிய நடைமுறை

காசோலை முறைகேட்டைத் தடுக்கும் வகையில், புதிய நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தபடவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காசோலை முறைகேட்டைத் தடுக்கும் வகையில், புதிய நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தபடவுள்ளது. இது குறித்து எல்லா வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகளில் நாள்தோறும் பல லட்சம் காசோலை பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், பல்வேறு பிரச்னைகளும், நடைமுறைச் சிக்கல்களும், மோசடிகளும் ஏற்படுகின்றன. இதனால், வாடிக்கையாளா்கள் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், காசோலை துண்டிப்பு முறை என்ற புதிய திட்டத்தை ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை கொண்ட காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன், அது குறித்த தகவலை குறுஞ்செய்தி, இணையவழி வங்கி சேவை (இன்டா்நெட் பேங்கிங்), செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அத்துடன், காசோலையைப் பெறும் நபரின் பெயா், தொகை மற்றும் தேதி ஆகியவற்றையும் காசோலையில் குறிப்பிட வேண்டும்.

இதன்மூலம், அந்தக் காசோலையின் நம்பகத் தன்மை குறித்து வங்கிகள் உறுதி செய்ய முடியும். அத்துடன், காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். இந்த புதிய நடைமுறை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து எல்லா வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தகவலை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com