தில்லி: 'கூட்ட நெரிசலான பகுதிகளில் மீண்டும் கரோனா பரிசோதனை'

தில்லியில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)

தில்லியில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா தொற்று மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை 'கரோனா பரவல் மூன்றாவது அலை' என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

இதனிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் ''சந்தை, உணவகங்கள், சலூன் கடைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கரோனா   பரிசோதனைகளை செய்ய வேண்டும். அதற்கு சுற்றுப்புறத்திலுள்ள பகுதிகளில் படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவுக் கூடங்களும், வெண்டிலேட்டர்களும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்'' என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

''பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீண்டும் கரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும். பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சந்தை, உணவகங்கள் போன்ற பொது இடங்களில் எடுக்கப்படும் கரோனா பரிசோதனை மாதிரிகளின் அடிப்படையில் அப்பகுதிகள் கட்டுப்படுத்தப்படும்'' என்று குறிப்பிட்டார்.

ஏற்கனவே கரோனா பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்வதாலேயே கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரிப்பதாகவும், இம்முறை அந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்றும் அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com