தெலங்கானாவில் கரோனா பாதிப்பு 2.44 லட்சமாக உயர்வு: 92% பேர் குணம்

தெலங்கானாவில் கரோனா பாதித்து 2.44 லட்சமாக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
T'gana's Covid tally surges to 2.44L, cure rate over 92%
T'gana's Covid tally surges to 2.44L, cure rate over 92%

தெலங்கானாவில் கரோனா பாதித்து 2.44 லட்சமாக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானாவில் இன்றைய பாதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று தெலங்கானாவில் புதிதாக 1,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதித்து ஆறு பேர் பலியாகியுள்ளதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,273 பேர் குணமடைந்துள்ள நிலையில் , இதுவரை 2,24,686 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். அதேசமயம் குணமடைந்தோர் விகிதம் 92.03 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா பாதித்து 18,100 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 15,335 பேர் வீட்டிலும், பல்வேறு நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஒரேநாளில் 45,529 பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர். அதில், 42,380 சோதனைகள் அரசு பரிசோதனை மையத்தில் எடுக்கப்பட்டது. 
தெலங்கானாவில் மொத்தம் 44,39,856-கும் அதிகமான கரோனா சோதனைகளை மேற்கொண்டுள்ளன என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com