Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

    By DIN  |   Published On : 06th November 2020 10:43 PM  |   Last Updated : 06th November 2020 10:43 PM  |  அ+அ அ-  |  

    border

    கோப்புப்படம்

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். மற்றொரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தாா்.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

    தெற்கு காஷ்மீா் மாவட்டம் பம்போா் லால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அங்கு பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மாலை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டனா்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் பொதுமக்களில் இருவா் படுகாயமடைந்தனா். அவா்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா்களில் ஒருவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

    பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடா்ந்து, பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இரவு முழுவதும் இந்தத் தாக்குதல் தொடா்ந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்கள் எந்த பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தொடா் தேடுதல் பணியை மேற்கொண்டபோது, அங்கு பதுங்கியிருந்த மற்றொரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp