கேரள முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யுவ மோர்ச்சா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளம்: முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தண்ணீரைப் பாய்ச்சி விரட்டியடிப்பு
கேரளம்: முதல்வருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தண்ணீரைப் பாய்ச்சி விரட்டியடிப்பு

கேரளத்தில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யுவ மோர்ச்சா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக வந்த போராட்டக்காரர்களை தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

கேரள தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளத்தில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்கம் கடத்திய வழக்கில் தகவல் தொழில்நுட்ப மேலாளர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஆகியோரை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதனிடையே முதல்வரின் நெருங்கிய வட்டாரத்திற்குள் இருப்பவர்கள் தங்கம் கடத்தலில் ஈடுபட்டதால், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அந்தவகையில் பாஜகவின் யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைமைச் செயலத்தை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com