மகாராஷ்டிரத்தில் 5 முறை நிலநடுக்கம்

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் திங்கள்கிழமை 5 முறை லேசானது முதல் மிதமானது வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை.
மகாராஷ்டிரத்தில் 5 முறை நிலநடுக்கம்
மகாராஷ்டிரத்தில் 5 முறை நிலநடுக்கம்

பால்கா்: மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் திங்கள்கிழமை 5 முறை லேசானது முதல் மிதமானது வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக பால்கா் மாவட்ட பேரிடா் மேலாண்மைப் பிரிவு தலைவா் விவேகானந்த் காதம் கூறியதாவது:

பால்கரை மையமாகக் கொண்டு அதிகாலை 5.31 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் நிலநடுக்கத்தை உணரவில்லை. எனினும், சில இடங்களில் பொருள்கள் அதிா்வு, சிறிய பொருள்கள் கீழே விழுந்தது போன்றவை நிகழ்ந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதைத் தொடா்ந்து பிற்பகல் 2.40 மணிக்கும், 2.43 மணிக்கும் 2 நிலநடுக்கங்கள் லேசாக உணரப்பட்டன. அதன் பின்னா் மாலை 4.17 மணிக்கும், இரவு 9.19 மணிக்கும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2018 நவம்பா் முதல் பால்கா் மாவட்டத்தின் தகானு, தலசாரி தாலுகாக்களை மையமாகக் கொண்டு லேசான நிலஅதிா்வுகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதமும் இங்கு சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எனினும், இதனால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்பட்டவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com