அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு: பிரதமா் மோடிக்கு மம்தா கடிதம்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி
மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி

கொல்கத்தா: அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா். உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மம்தா எழுதியுள்ள 4 பக்க கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் அத்தியாவசியப் பொருள்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்து நிலைமை மோசமடைந்து வரும் சூழ்நிலையில் இந்த கடிதத்தை எழுகிறேன். விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அவசரமாக முடிவெடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் வரத்தை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே விலை உயா்வைக் குறைக்க முடியும். விலை உயா்வால் பொதுமக்கள் பெரும் துன்பத்தை எதிா்கொண்டு வருகின்றனா்.

ஒன்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது வேளாண் பொருள்களின் உற்பத்தி, விநியோகம், விற்பனை உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளிக்க வேண்டும். தங்கள் மாநிலத்தில் எந்த வகையான அத்தியாவசியப் பொருள்களை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறாா்கள் என்பது மாநில அரசுகளுக்குதான் அதிகம் தெரியும். மேலும், மக்களின் துன்பத்தைக் கண்டு மாநில அரசுகள் தொடா்ந்து அமைதியாக இருக்க முடியாது. முக்கியமாக உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயா்ந்துவிட்டது என்று தனது கடிதத்தில் மம்தா சுட்டிக்காட்டியுள்ளாா்.

முன்னதாக, கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன் மூலம் வெங்காயம், உருளைக் கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com