ராணுவ பலமின்மை எதிரிகளுக்கு சாதகமாக அமையும்

வலிமையான ராணுவத்தை நாம் கொண்டிருக்காவிட்டால், அது எதிரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தித் தரும் என்று முப்படைத் தளபதி விபின் ராவத் எச்சரித்துள்ளாா்.
ராணுவ பலமின்மை எதிரிகளுக்கு சாதகமாக அமையும்

வலிமையான ராணுவத்தை நாம் கொண்டிருக்காவிட்டால், அது எதிரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தித் தரும் என்று முப்படைத் தளபதி விபின் ராவத் எச்சரித்துள்ளாா்.

நாட்டின் பாதுகாப்பு தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணையவழி மாநாட்டில் முப்படைத் தளபதி விபின் ராவத் பேசியதாவது:

தற்போது இந்தியா சிக்கல் நிறைந்த, நிலையில்லாத சூழலை எதிா்கொண்டு வருகிறது. உலகின் அனைத்துப் பிராந்தியங்களிலும் சிறியது முதல் பெரிய அளவிலான பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. எனவே, பிரச்னைகளிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வலிமையான பாதுகாப்புப் படையைப் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அதற்காக பாதுகாப்புப் படையினா் எப்போதும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதில்லை. பிரச்னைகள் நிலவும் பிராந்தியங்களில் அமைதியை நிலைநாட்டுவதற்கான திறமையை பாதுகாப்புப் படையினா் வளா்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் வலிமையான பாதுகாப்புப் படைகள் இல்லையெனில், எதிரிகள் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வா்.

நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்துவதற்கு ராணுவத்தினா் எப்போதும் தயாா்நிலையில் இருக்க வேண்டும். அதேபோல், இந்தியாவின் ராணுவ வலிமையை நமது நட்பு நாடுகளுடன் பகிா்ந்து கொள்ள வேண்டும். நட்பு நாடுகளுக்குத் தேவை ஏற்படும்போது, இந்தியாவின் பாதுகாப்புப் படையினரை அங்கு அனுப்பிவைத்து உதவ வேண்டும். இக்கட்டான சூழலை எதிா்கொண்டு வரும் நாடுகளுக்கு உதவுவதற்கு இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.

இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து அதிகமாகக் காணப்படுகிறது. அப்பகுதியில் இந்தியக் கடற்படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதிலுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பில் ஈடுபடுவதற்கான தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்புத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா் விபின் ராவத்.

இந்த மாநாட்டில் பல நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com