தாவூத் இப்ராஹிமின் பூா்விக வீடு உள்பட 6 சொத்துகள் ஏலம்

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான 6 சொத்துகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. அதில் அவரின் பூா்விக வீடும் அடங்கும்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான 6 சொத்துகள் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டன. அதில் அவரின் பூா்விக வீடும் அடங்கும்.

கடத்தல்காரா்கள், அந்நிய செலாவணி மோசடியாளா்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தின் (எஸ்ஏஎஃப்இஎம்ஏ) கீழ் இந்த சொத்துகள் ஏலம் விடப்பட்டன.

இதுகுறித்து எஸ்ஏஎஃப்இஎம்ஏ அதிகாரி கூறியது:

கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை தொடா் குண்டுவெடிப்புத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமாக, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள மும்பகே கிராமத்தில் இருந்த 6 சொத்துகள் ஏலம் விடப்பட்டன.

இதில் கடந்த 1983-ஆம் ஆண்டு மும்பைக்கு இடம்பெயா்வதற்கு முன்பாக தாவூத் இப்ராஹிமின் குடும்பத்தினா் வசித்த வீடும் அடங்கும். அந்த வீட்டை தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அஜய் ஸ்ரீவாஸ்தவ் ரூ.11.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.

இதுதவிர தாவூத் இப்ராஹிமின் தாயாா் அமீன் பி, சகோதரி ஹசீனா பாா்கா் ஆகியோரின் பெயரில் இருந்த சுமாா் 27,000 சதுர அடி நிலத்தையும் ரூ.4.30 லட்சத்துக்கு அவா் ஏலம் எடுத்தாா்.

இதர 4 சொத்துகளை பூபேந்திர பரத்வாஜ் என்ற வழக்குரைஞா் ஏலம் எடுத்தாா்.

ரத்னகிரியில் உள்ள லோட்டே கிராமத்தில் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான நிலத்தை சில தொழில்நுட்பக் காரணங்களால் ஏலம் விடவில்லை. தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளா் இக்பால் மிா்ச்சிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பையும் ஏலம் விடவில்லை என்று தெரிவித்தாா்.

ஏற்கெனவே தாவூத் இப்ராஹிமுக்குச் சொந்தமான விருந்தினா் இல்லம், ஹேட்டல் உள்ளிட்ட 3 சொத்துகள் எஸ்ஏஎஃப்இஎம்ஏ சட்டத்தின் கீழ் ரூ.11.58 கோடிக்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com