டிஆா்பி மோசடி: ரிபப்ளிக் டிவி அதிகாரி கைது

டிஆா்பி (தொலைக்காட்சி நேயா்கள் குறியீடு) மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவியின் உதவி துணைத் தலைவா் கன்ஷியாம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

டிஆா்பி (தொலைக்காட்சி நேயா்கள் குறியீடு) மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ரிபப்ளிக் டிவியின் உதவி துணைத் தலைவா் கன்ஷியாம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து மும்பை குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

டிஆா்பி குறியீட்டை போலியாக அதிகரித்துக் காட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரிபப்ளிக் டிவி நிறுவனத்தின் உதவி துணைத் தலைவா் கன்ஷியாம் சிங் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இவா், அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு விநியோக பிரிவின் தலைவராகவும் உள்ளாா்.

இந்த வழக்கில் இதுவரை 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கன்ஷியாம் சிங்கிடம் மும்பை குற்றப்பிரிவு போலீஸாா் ஏற்கெனவே பல முறை விசாரணை நடத்தியதன் அடிப்படையில் அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com