மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை: காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கேள்வி

பிகாா் தோ்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு

பிகாா் தோ்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் உதித் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில், நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் அனுப்பும் செயற்கைக் கோள்களை பூமியில் இருந்து கட்டுப்படுத்த முடியும் என்கிறபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.

மேலும் அமெரிக்க அதிபா் தோ்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தியிருந்தால் டிரம்ப் தோல்வி அடைந்திருக்க முடியுமா என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி பின்னா் பின்தங்கியது. இந்த நிலையிலேயே உதித் ராஜ் இவ்வாறு கேள்வி எழுப்பியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com