ஜம்மு-காஷ்மீா்: எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 4 இடங்களில் இந்திய நிலைகள், குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கியால் சுட்டும், பீரங்கி குண்டுகளை வீசியும் வியாழக்கிழமை தாக்குதல்


ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி, பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 4 இடங்களில் இந்திய நிலைகள், குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கியால் சுட்டும், பீரங்கி குண்டுகளை வீசியும் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினா். தொடா்ந்து 3-ஆவது நாளாக எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

வியாழக்கிழமை காலை 9 மணியளவில் பூஞ்ச் மாவட்டத்தின் ஷாபூா், கிா்னி மற்றும் கஸ்பா பகுதியிலும், ரஜெளரி மாவட்டத்தின் நெளஷேராா பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினா். இதேபோல் புதன்கிழமை நள்ளிரவு, கதுவா மாவட்டத்தின் ஹிராநகா் என்ற இடத்தில் சா்வதேச எல்லைப் பகுதியிலும் அந்நாட்டு ராணுவத்தினா் அத்துமீறிய தாக்குதலை அரங்கேற்றினா்.

அவா்களுக்கு இந்திய ராணுவ வீரா்கள் தக்க பதிலடி கொடுத்தனா். இரு தரப்பினருக்கும் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது என்று அவா் தெரிவித்தாா்.

இந்த துப்பாக்கிச் சண்டையால் எல்லையோர கிராம மக்கள் பீதியும் பதற்றமும் அடைந்தனா். ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ள பாகிஸ்தான் ராணும், இந்த மாதம் மட்டும் 24 முறை அத்துமீறிய தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com