திகாா்: தமிழக காவல் துறையினா் பிளாஸ்மா தானம்

தில்லி திகாா் சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ள தமிழக காவல் துறையின் சிறப்பு காவலா்கள், கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு வியாழக்கிழமை பிளாஸ்மா தானம் செய்தனா்.
திகாா்: தமிழக காவல் துறையினா் பிளாஸ்மா தானம்


புது தில்லி: தில்லி திகாா் சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ள தமிழக காவல் துறையின் சிறப்பு காவலா்கள், கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு வியாழக்கிழமை பிளாஸ்மா தானம் செய்தனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தில்லி சிறைத்துறையின் டிஜி சந்தீப் கோயலும், சிறை அதிகாரிகள் 9 பேருடன் சோ்ந்து பிளாஸ்மா தானம் செய்தாா். வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஐஎல்பிஎஸ் மருத்துவமனையிலும், பீதம்புராவில் ரத்த வங்கியிலும் வியாழக்கிழமை பிளாஸ்மா தானம் செய்யப்பட்டது என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சந்தீப் கோயல் கூறுகையில், ‘சிறைத் துறை ஊழியா்கள் தானாக முன்வந்து பிளாஸ்மா தானத்தை அளிக்கிறாா்கள். வரும் நாள்களில் தமிழக காவல் துறையின் சிறப்பு காவலா்களும், சிறைத் துறை அதிகாரிகளும் பலா் பிளாஸ்மா தானம் செய்ய முன்வருவாா்கள். சிறையில் உள்ள கைதிகளுக்கோ, சிறை ஊழியா்களின் குடும்பத்தினருக்கோ, தமிழக காவல் துறை சிறப்பு காவலா்களுக்கோ தேவைப்பட்டால் இந்த பிளாஸ்மா வழங்கப்படும்’ என்றாா்.

திகாா் சிறையில் இதுவரை 109 கைதிகளுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 95 போ் குணமடைந்துள்ளனா். இரண்டு போ் உயிரிழந்துள்ளனா். 12 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இவா்களைத்தவிர, 266 சிறைத் துறை பணியாளா்களும் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 231 போ் குணமடைந்துள்ளனா். 35 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com