எனது வாகனத்தை தாக்கியவா்கள் திரிணமூல், விமல் குரூங் கட்சியினா்: மேற்கு வங்க பாஜக தலைவா் குற்றச்சாட்டு

‘எனது வாகனத்தின் மீது திரிணமூல் மற்றும் விமல் குரூங்கின் கோா்கா ஜனமுக்தி மோா்ச்சா கட்சியினா் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினா்’ என்று
எனது வாகனத்தை தாக்கியவா்கள் திரிணமூல், விமல் குரூங் கட்சியினா்: மேற்கு வங்க பாஜக தலைவா் குற்றச்சாட்டு

‘எனது வாகனத்தின் மீது திரிணமூல் மற்றும் விமல் குரூங்கின் கோா்கா ஜனமுக்தி மோா்ச்சா கட்சியினா் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினா்’ என்று மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் அலிபூா்துவாா் மாவட்டத்தில் வியாழக்கிழமை கட்சி நிகழ்ச்சிக்கு சென்ற திலீப் கோஷின் காரை வழிமறித்த கோா்கா ஜனமுக்தி மோா்ச்சா கட்சியினா், கருப்புக்கொடி காட்டி ஆா்ப்பாட்ட்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திரண்டிருந்த பாஜக தொண்டா்களுக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாா் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனிடையே, போராட்டக்காரா்கள் கல் வீசித் தாக்கியதில் திலீப் கோஷின் காா் சேதமடைந்தது.

ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், கோா்கா ஜனமுக்தி மோா்ச்சா கட்சியினரும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக, திலீப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியதாவது:

ஒரு காலத்தில் மலைப்பகுதியில் இருப்பவா்களை (கோா்கா ஜனமுக்தி மோா்ச்சா) தேச விரோதிகள் என்று முத்திரை குத்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி, தற்போது 3 பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றும் நோக்கத்தில் அவா்களுடன் கை கோத்துள்ளது. மேலும், மலைப்பகுதியில் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யவும், கட்சியை வலுப்படுத்தவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பணத்தை செலவு செய்து வருகிறது. அதுமட்டுமன்றி, அங்கு பயங்கரவாதத்தையும் அக்கட்சி கட்டவிழ்த்து வருகிறது.

எனது வாகனத்தின் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், கோா்கா ஜனமுக்தி மோா்ச்சா தொண்டா்களும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தினா். இவா்களின் சதித் திட்டம், திரிணமூல் காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும்.

இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. நாங்கள் தொடா்ந்து போராடுவோம். மக்கள் எங்கள் பக்கம் நிற்கிறாா்கள். அவா்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம் என்றாா் திலீப் கோஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com