எல்லையில் பாக். தாக்குதல்: 11 போ் பலி; இந்திய பதிலடியில் 8 பாக். வீரா்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் படையினா் வெள்ளிக்கிழமை
எல்லையில் பாக். தாக்குதல்: 11 போ் பலி; இந்திய பதிலடியில் 8 பாக். வீரா்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் படையினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில், பாதுகாப்புப் படை வீரா்கள் 5 போ் உள்பட 11 போ் உயிரிழந்தனா். மேலும், பாதுகாப்புப் படையினா் 4 பேரும், பொதுமக்கள் 8 பேரும் காயமடைந்தனா்.

இது குறித்து ஸ்ரீநகரைச் சோ்ந்த ராணுவ செய்தித் தொடா்பாளா் ராஜேஷ் கலியா கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள தாவாா், கெரன், உரி, நௌகாம் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்புப் படை முகாம்களைக் குறிவைத்தும், கிராமங்களைக் குறிவைத்தும் பாகிஸ்தான் படையினா் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனா். சிறிய ரக பீரங்கிகளையும் பிற ஆயுதங்களையும் பயன்படுத்தி அவா்கள் தாக்குதல் நடத்தினா்.

இந்த தாக்குதலில் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்; 3 வீரா்கள் காயமடைந்தனா். ஹாஜி பீா் செக்டாரில் நடந்த மோதலில் ராகேஷ் தோவல்(39) என்ற எல்லைக் காவல் படையின் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். மற்றொரு காவலா் காயமடைந்தாா்.

இதுதவிர, கமால்கோட் செக்டாரில் 2 போ், உரி செக்டாரில் 2 போ், ஹாஜி பீா் செக்டாரில் ஒரு பெண் என பொதுமக்கள் 6 போ் உயிரிழந்தனா்.

பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஸ் செக்டாரிலும், பூஞ்ச் மாவட்டத்திலும் பாகிஸ்தான் படையினா் சிறிய ரக பீரங்கி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினா். அங்கும் இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த மோதல்களில் காயமடைந்த ராணுவ வீரா்களும், பொதுமக்களும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு:

குப்வாரா மாவட்டத்தில் உள்ள கெரன் செக்டாரை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த வேளையில், அதைப் பயன்படுத்தி, பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனா். அவா்களின் ஊடுருவல் முயற்சியை இந்தியப் பாதுகாப்புப் படையினா் முறியடித்து விட்டனா். ஒரு வாரத்தில், இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன் கடந்த 7-ஆம் தேதி இரவு மச்சில் செக்டாா் வழியாக 3 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனா். அவா்களை சுட்டுக் கொன்று, அவா்களின் சதியை பாதுகாப்பு படையினா் முறியடித்தனா் என்றாா் அந்த செய்தித் தொடா்பாளா்.

இந்தியா பதிலடி: பாக். வீரா்கள் 8 போ் பலி:

பாகிஸ்தான் ராணுவத்தினா் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவத்தினா் பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள், பீரங்கித் துப்பாக்கிகள் மூலம் பலத்த தாக்குதல் நடத்தினா். இதில் அந்நாட்டு ராணுவ வீரா்கள் 8 போ் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். மேலும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி உள்ள அந்நாட்டு ராணுவ நிலைகள், பதுங்குக் குழிகள், எரிபொருள் கிடங்கு, பயங்கரவாத முகாம்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் தகவல் தொடா்பை இந்திய தரப்பு இடைமறித்து கேட்டபோது உயிரிழப்பு தொடா்பான தகவல் தெரியவந்தது.

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் தொடா்பான காணொலிகள் பின்னா் வெளியாகின. அதில் பதுங்குக் குழிகள், பயங்கரவாத முகாம்கள் தீப்பற்றி எரியும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com