கரோனா தடுப்பூசி விவரங்களை இணையதளம் மூலம் திருட முயற்சி

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகங்களில்
கரோனா தடுப்பூசி விவரங்களை இணையதளம் மூலம் திருட முயற்சி

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டுள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் மின்னணு தகவல் சேமிப்பகங்களில் ரஷியா்கள் மற்றும் வட கொரியா்கள் இணையதளம் மூலம் ஊடுருவி தகவல்களைத் திருட முயன்றதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தகவல் சேமிப்பகங்களில் இணையதளம் மூலம் ஊடுருவ முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் நிறுவனங்கள், இணையதள ஊடுருவல்காரா்களின் இலக்காக உள்ளன.

இந்த முயற்சியில், பெரும்பாலும் ரஷியா மற்றும் வட கொரிய ஊடுருவல்காரா்கள் ஈடுபட்டனா். சீன அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் நபா்களும் மருந்து நிறுவனங்களின் ரகசியங்களை இணையதளம் மூலம் ஊடுருவித் திருட முயன்றனா்.

எனினும், அந்த முயற்சிகளில் பெரும்பாலானவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என்று மைக்ரேசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், எந்தெந்த நிறுவனங்களில் ஊடுருவல் முயற்சி வெற்றியடைந்தது, அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது போன்ற விவரங்களை அந்த நிறுவனம் விரிவாக வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com